என்னை மறந்ததேன்

ஆதவனை கண்ட,
அவசரத்தில்...
அழகு தாமரை ஒன்று..
மொடடவிழ்ந்ததம்மா,
அந்தநேரம்..
அதன் அழகு கண்டு,
சொட்டு தேன் துளிக்கு வட்டமிட்ட....
ஒரு பொன் வணடு,
வந்தமர்ந்தம்மா.
மாலை வந்ததையறியா மூழ்கி போனதம்மா...
மதுரமயக்கத்தில்.
தேன் கொடுத்த... தாமரையும, தன்னை இழந்த.. தவிப்பின் மறதியில் பதிலேதும் வராமல் போகவே,
இதழ் மூடி கொணடது. அதிகாலையும் வந்தது.. ஆதவனும் வந்ததான். . அழகு தாமரையும்...
அதைக்கண்டு,
அப்போது கண் விழிததம்மா. அதில் இருந்த..
அந்த வண்டு மட்டும்,
விழி திறக்கவே இல்லையம்மா. சமாதியில் மலர் தூவலாம் ஆனால்... மலரே சமாதியானால் .. என்ன செய்வது?

எழுதியவர் : மஹாமதி (25-Jan-15, 8:33 pm)
சேர்த்தது : மகாமூர்த்தி
பார்வை : 84

மேலே