குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாய்
ஆராஜகம் புரிந்த ஆங்கிலேயனை
அகிம்சையால் அடக்கி விரட்டி அடித்த
அற்புத நாள் இது .!

ஆகிக்க ஆட்சியை உடைத்தெறிந்து
அன்னை பூமியை மீட்டு
உரிமைகளை வென்றெடுத்த
உன்னத நாள் இது ..!

வேகம் கொண்ட வீரர்கள்
இன்னுயிரை தியாகம் செய்து
தன்மான இந்தியனாய் தலைநிமிர வைத்த
தலை சிறந்த நாள் இது ..!!

முப்படை அணிவகுக்க
வான் படையும் மலர்தூவ
குடியரசு தலைவர் கொடியேற்ற
குழந்தைகளோடு பெரியவரும்
குதுகளிக்கும்
குடும்பத் திருநாள் இன்று ..!!


அனைத்து நண்பர்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : கயல்விழி (25-Jan-15, 10:06 pm)
பார்வை : 426

மேலே