குடியரசு நாள் நல்வாழ்த்துகள்
வானாளும் வெண்புறாவே ,
“நின் வெண்ணிறம் கண்டு
நின்றேன் வியந்து அன்று...
வெண்மையும் வேடமோ என்று
வெறித்து நிற்கிறேன் இன்று…
கள்ளம் இல்லாமையின்
இலக்கணம்தானே இன்று,
களவானித்தனத்தின்
இலக்கியமானதேனோ?
வெள்ளையன் விட்டோடிய
விடுதலை தேசம் இன்று
வெள்ளாடை வேந்தர்களின்
விளையாட்டுப் பொருளானதோ?"
குமுறலில்
‘குடியரசு நாள் வாழ்த்து' உரைக்கும்
குறுமதியோன்
“அஞ்சா அரிமா”