அமுத நிலாக்கள்

அமுத நிலாக்கள்!
பருத்திப் பூ பிஞ்சு விரல்கள்,
ஆழியிலுள்ளே சிப்பிக்கூட்டங்களின்
சிணுங்கல் போன்ற குறுநகை,
பிறந்த மதி போன்ற வட்டமுகம்.
இளந்தோளில் அசைந்தாடி
உள்ளத்தில் இறங்கும் தென்றல் காற்று.

செய்த தவறை மறைக்கத்தெரியாத
செல்லப்பார்வை, என் மார்பில் தூங்கி
கதை சொல்லச் சொல்லும் மழலை
கனைக்கும் இன்பக்கதை. கதை முடியாமலே
தொட்டான் சிணுங்கி போல் என்
மார்பை பற்றி பிடிக்கும் பிஞ்சு
ரேகைகள் அழகின் செல்ல ஓவியம்.

சின்ன ரோஜா ஒன்று மலர்கள்
பறிக்கும் குறும்புத்தனம். தட்டாம்பூச்சி
சிறகொன்று பட்டாம்பூச்சியை
பிடிக்கும் அறியாத்தனம், தூக்கி
நடக்கச் சொல்லி பாவைகள்
கெஞ்சும் பார்வை எந்த கல்நெஞ்சையும்
இலகச் செய்யும் இன்பமருந்து.

தேன் வதையிலிருந்து பிழிந்தேடுத்த
இனிக்கும் தேனும் பிள்ளை நிலா
பாடும் கனிமொழிகளும் ஒன்றல்லவா?
என் நிலவோடு வாழ்கையில் பல
வயது கழிகின்றது. அந்த வருடங்கள்
ஒரு நாழிகை போலும் என்னால்
உணரமுடியவில்லை. தேய்கின்றது
பொன்மாலை நிலா, என்றும் தேயாத
ஆசைநிலா அமுத நிலாக்கள்!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-Jan-15, 12:38 am)
Tanglish : amutha nilaakkal
பார்வை : 120

மேலே