விட்ட சந்தோசங்களை தேடி நேற்றைய நாட்களை நோக்கி
நன்றாக படி என்றார்கள் !
அவன் இரவு பகல் பாராது படித்தான். படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றான்...
உத்யோகம் புருஷ இலச்சனம் என்றார்கள் ! நல்ல பணியில் சேர்ந்தான். பதவி உயர்வு பெற்றான்...
வாழ்க்கை துனை வேண்டும் என்றார்கள் !
அவன் துனைக்கு திருமணம் செய்தான்.ஆசைக்கு குழந்தை பெற்றான்...
குடும்பத்தை சந்தோசமாய் வைத்திரு என்றார்கள் !
அவன் ஓடி, ஓடி அயராது உழைத்தான்.வீடு நிலம் எஸ்டேட் வாங்கினான். செல்வச் செழிப்பை சேர்த்தான்...
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்றார்கள் !
அவன் உலகம் முழுதும் சுற்றினான் மெடல்கள் பல பெற்றான் .புகழின் எல்லையை கடந்தான்...
ஓய்வு வேண்டும் என்றார்கள் !
அவன் இதயதிற்கும், நுரையீரலுக்கும் ஓய்வு கொடுக்க நினைத்தான்...
வெற்றியின் நுனி வரை சுவைத்து மரணத்தை தழுவி முத்தமிட நினைத்த அவன்...
இன்று வரை தனக்கென வாழாது விட்ட சந்தோசங்களை தேடி நேற்றைய நாட்களை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்...