தன்னம்பிக்கை ஊற்று

வானின் கோலம் விதவை !
வாழ்வின் கோலம் வறுமை !
நாட்டின் கோலம் வறட்சி !
நம்பிக்கையற்ற வீண் முயற்சி !

அயல்நாட்டிடம் என்ன பயிற்சி !
உலகுக்கு நாமே முதிர்ச்சி !
அனைத்துமிழந்த பின்னென தளர்ச்சி !
உலைவைக்க வேண்டும் கிளர்ச்சி !

வாசலில் சாணம் தெளிச்சி !
விடியலை நீயும் கிளப்பு !
நம்பிக்கை இழந்த இளைஞனை
அதிகாலையில் வேலைக்கு எழுப்பு !

மதுமயக்கத்தில் இருப்பவன் முகத்தில் தண்ணீர் தெளித்து
வாசலுக்கு கரைத்ததை தலையில் ஊற்று!
தன்னாலே மாற்றம் வரும்
தன்னம்பிக்கை எனும் ஊற்று வரும் !

எழுதியவர் : கனகரத்தினம் (27-Jan-15, 4:28 am)
Tanglish : thannambikkai uutru
பார்வை : 873

மேலே