காதலில்

கற்கண்டு சாலையை
மொய்க்கின்ற வாகனம்.

நெஞ்சுக்குள் ஏதோ
மின்சார அதிர்வுகள்.

விழிமூடி உறங்கிட
அரங்கேறும் நடனம்.

உள்ளங்கை உராய்ந்து
ஒழுகின்ற உதிரம்.

உற்சாகம் குறைந்து
எழுகின்ற மிருகம்.

வழி தவறிய சாலைகள்
வசந்தத்தின் தவறுகள்.

வார்த்தைகள் தடுமாறும் விந்தை
விரசங்களும் அதற்க்கு உடந்தை.

வற்றாத பாசம்
தழும்பாகும் நேசம்.

நாளெல்லாம் நந்தவனமாகும்
பூவெல்லாம் நடைபிணமாகும்.

தூரவொளிச்சத்தம் மூர்க்கமாகும்.

பிறை தேடிய வானம்
பிரியத்தில் காணும்.
பிரியாமல் நாமும்
சரிபாதியாவோம்.........

எழுதியவர் : அன்வர்தீன் (27-Jan-15, 2:59 am)
சேர்த்தது : ckவசீம்அன்வர்
Tanglish : kathalil
பார்வை : 63

மேலே