பணமே பணமே உன்னால் போனது மனித மனமே
இயற்கை என்பது இறைவனடா -அதன்
செயற்கை என்பது அறிவியலடா !
அறிவியல் ஆரம்பம் அறிவினிலடா!
அறிவிழந்து கிடப்பதேனடா ?
இயற்கையின் ஓர் அங்கம் அறிவியல் !
அறிவோம் நாமும் நம் அறிவினில் !
இயற்கை வளம்பெற ஆக்கம் செய்வோம் !
உலக மனங்களும் ஊக்கம் பெறுவோம் !!
மனிதா !மனிதா !பணமா பெரிது !
மனிதா !மனிதா !மணி தாவென்றால்
மண்ணில் மழைத்துளி விழுமா ?
உன்னில் உயிர் தான் வாழுமா ?
அகிலத்தின் காட்சியை காணும்
கண்ணும் பார்வைக்கு பணம்கேட்டால்
மண்ணும் பொன்னும் தந்தாலும் போதாது!
மறந்து போனாயோ ?இல்லை மரத்து போனாயோ ?!!
மனிதம் தொலைத்த மனிதா
உனக்கு பிடித்ததென்ன மதமா ?
இயற்கையழித்து பணமாக்கி-உன்
இறப்பை நீயே தேடுகிறாய் !
பிறப்பும் இறப்பும் இலவசம்!
இதயமும் சுவாசமும் இலவசம்!
குருதியும் மஞ்சையும் இலவசம்!
மகிழ்ச்சியை தடுக்கும் மனமாகட்டும் உன்வசம் ! !
பணமொன்றை நினைத்து !நினைத்து!
மனமொன்றை குழப்பி !குழப்பி!
உறவொன்றை வெறுத்து! வெறுத்து!
இழக்கின்றாய் மகிழ்ச்சி! மகிழ்ச்சி !!
வாழ்க்கைக்கு பணமும் அவசியமே !
பணமே வாழ்க்கையல்ல உணர்வது அவசியம் !
பணம் கொண்டு சிரிப்பை வாங்கி
மனமதை சிறப்பாக்கிட முடியுமா ?
மருத்துவம் பார்த்திட பணமவசியம்!
மருந்துக்கும் வேண்டாம் பணமோகம்!
மகிழ்ச்சியை உனக்குள் புதைத்தால்
மருத்துவம் பார்த்திட நேரிடும் !!
இருப்பதை கொண்டு மகிழ்ந்துகொள்!
இழந்ததை அன்றே மறந்திடணும் நினைவில்கொள் !
இன்றைய நிலை நாளை இல்லை -என்பதையென்னி
இயற்கை இறைவனை துதித்துக்கொள் !
வாழ்வின் துவக்கமெதுவென அறிந்துகொள் !
வாழ்க்கை சுவர்க்கமெதுவென புரிந்துகொள் !
வழிகள் புதிதாய் பிறக்கட்டும் விழித்துகொள் !
வாழ்ந்திட வேண்டும் இயற்கையை வளர்த்துக்கொள் !
கருசுமந்தவள் பணமென எண்ணம் கொண்டிருந்தாள்
பாரினில் எங்கோ நீ யாசியாகிருப்பாய் !
எல்லாம் இழந்த தாய்மையும் இறையிடம் வேண்டுவது
பிள்ளை பாசத்தை மட்டுமென்ற உண்மையுணர்ந்தால் நன்று !