விரட்டுகிறான்

சினம் கொண்ட
காளை என் முன்
பாயிந்து வருகிறது

பதுங்கி கொள்ள
திசை தேடுகிறது
மனம்

முக கண்கள்
மூடி கொண்டதால்
கால் கண்கள்
திறந்து கொண்டன

வெட்ட வெளியில்
சிக்கி கொண்ட
உடல்

தஞ்சம் புக
தடுப்பணை
தேடுகிறது

வீதியில்
வந்த காளை
நெருங்கி வர

உடலை விட்டு
உயிர் மட்டும்
வெளியே
சென்று சென்று
வருகிறது .

துரோகத்தின்
உச்சம்
மனசாட்சியின்
வரம்பு மீறல்

கொலையாய்
கொன்று
போடுகிறது .

எழுதியவர் : ரிச்சர்ட் (27-Jan-15, 11:26 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : virattugiraan
பார்வை : 58

மேலே