இதற்கு பெயர் தான் கல்யாணமா

இது தான் கல்யாணமா?

நாலைந்து புகைப்படங்களை காட்டி
இதில் யாரை பிடித்திருக்குறது
என்று கேட்கின்றார்களே
இது தான் கல்யாணமா?

அவன்/அவள்
அழகா இருக்கின்றார்
நன்றாக படித்து இருக்கின்றார்
பெரிய இடத்தில் வேலை பார்க்கின்றார்
மகனை/மகளை திருமணம் செய்து வைத்தால் வாழ்வில்
சந்தோஷமாக இருப்பாள்/இருப்பான் என்று நினைக்கின்றார்களே
இது தான் கல்யாணமா?

என் மகன்/மகள் காதலித்தாலும் பரவாயில்லை
ஆனால்
காதலன்/காதலி நமது சொந்தகாரராக‌ இருக்கவேண்டும்
நமது ஊர்காரராக இருக்கவேண்டும்
நமது ஜாதிகாரனாக இருக்கவேண்டும்
என்றெல்லாம் எதிர்பார்க்கின்றர்களே
இது சரியா?

காதல்
ஜாதி பார்த்து
ஊர் பார்த்து
இனம் பார்த்து
சொந்தம் பார்த்து
வருவது தானா காதல்?
அதட்கு பெயர் காதலா?
இது பார்ப்பது சரியா?

காதல் இல்லை என்றாலும்
ஒருவரை பிடித்திருகிறது என்றாலும்
அதட்கும் ஜாதி, இனம், ஊர் , சொந்தம், பார்கின்றார்களே
இது சரியா?

எத்தனையோ ஆண்கள்/பெண்கள் இருந்தாலும்
ஒருவரை பார்த்தவுடன் மட்டும்
இவர்/இவள் தான் நமக்கு கணவராக/மனைவியாக அமையவேண்டும்
என்று நம் மனம் நினைக்கிறது அல்லவா
அதையும் இந்த ஜாதி ஊர் இனம் சொந்தம் என்று பார்த்து மறுகின்ரனரே
இது சரியா?

பெற்றோர்கள் காதலித்த போது இனித்தது
ஆனால்
அவர்களின் பிள்ளைகள் யாரையாவது பிடித்திருக்கிறது
என்று சொன்னால் அது கசக்குமா?

அண்ணன்/அக்கா காதலித்தால் அது சரி
அவர் தங்கை/தம்பி யாரையாவது பிடித்திருக்கிறது
என்று சொன்னால் தவறா?

இந்த காதலை ஏற்றுக்கொண்டாலும்
உடனே ஜாதி இனம் சொந்தம் ஊர்
என்றெல்லாம் பார்க்கின்றார்களே
இது சரியா?

இதெல்லாம் பார்பவர்கள் பெற்ற பிள்ளையின் மனதை மட்டும் ஏன் உணருகின்றார்கள் இல்லை?
அவன்/அவள் சந்தோஷத்தை ஏன்
உணருகின்றார்கள் இல்லை?

தன் பிள்ளை சந்தோஷமாக வாழ வேண்டும்
கடைசி காலத்தில் ஒரு துணை வேண்டும்
என்று தானே திருமணம் செய்து வைக்கின்றார்கள்...!!
அது தன் பிள்ளை விரும்புகின்ற
ஆண்மகனாக/பெண்ணாக இருந்தால் தவறா?

தான் விரும்புகின்ற ஆண்மகன்/பெண்
தனது ஊர் காரர் தானா
தனது ஜாதி காரர் தானா
தனது சொந்த காரர் தானா
அப்பிடி இல்லை என்றால் பெற்றோர்கள்
இதை ஏற்கமாட்டார்களே
என்று எண்ணி
தினம் தினம் மனதளவில்
தற்கொலை செய்கிறார்களே
இது புரிவதில்லையா?

அவர்கள் சொந்தம் பந்தத்துக்கு பயந்து
தன் பிள்ளையின் விருப்பத்தை உணருவதில்லையே
இது சரியா?

வாழபோவது கொஞ்ச நாட்கள்
கல்யாணம் ஒரு முறை தான்
இதில் வாழப்போகும் தன் பிள்ளையின்
விருப்பத்தை ஏற்காமல் போகின்றார்களே
இது சரியா? இது தான் வாழ்க்கையா?

இப்படி திருமணம் செய்து வைத்தால்
அவன்/அவள் நிம்மதியாக இருப்பார்களா???

எது செய்தாலும் தன் பிள்ளைக்கு பிடிகின்றதா
என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள்
ஏன் அவன்/அவள் விருப்பத்தை ஏற்க மறுக்கின்றனர்?

பிள்ளைகள் தானே வாழப்போகின்றானர்...
அவர்களுக்கு பிடித்தவரை திருமணம் செய்து வைக்க மறுகின்றனரே இது சரியா?

நமது உயிர் நம்மை விட்டு
எப்போது போகும் என்று தெரியாது
இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் அல்லவா?
அதை கல்யாணம் என்ற பெயரில்
அவனுக்கு/அவளுக்கு இஷ்டம் இல்லாத ஒருத்தியை/ஒருவனை
மணம் முடித்து
பிள்ளைகளின் சந்தோஷத்தை அழிப்பது சரியா?
இல்லை
ஜாதி இனம் ஊர் என்றெல்லாம் பார்க்காமல்
அவன்/அவள் மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம்
செய்து வைத்து அவர்கள் சந்தோஷமாக வாழ வழியமைப்பது சரியா?

எந்த மனிதரும்
தாய, தந்தையை,உடன்பிறந்தவர்களை, உறவினர்களை, குழந்தைகளை
தேர்வுசெய்ய முடியுமா?
தன் துணையை மட்டும் தானே
தேர்வுசெய்ய முடியும்!!
அந்த துணை அவனுக்கு/அவளுக்கு பிடித்தவராக இருந்தால் தவறா?
இதை பெற்றோர்கள் ஏற்க மறுத்தால்
இது சரியா?

வாழ போகும் இந்த கொஞ்ச நாட்களில் ஆவது
சந்தோஷமாக வாழ வேண்டும் அல்லவா...?

கல்யாணம் செய்து வைத்தால் மட்டும் போதும் என்று நினைத்து பிள்ளைகளுக்கு பிடிக்காத ஒருவரை
தங்கள் சந்தோஷத்துக்காக திருமணம் செய்து வைத்து
பிள்ளையின் சந்தோஷத்தை பார்க்காமல்
செய்கின்றார்களே

இதற்கு பெயர் தான் கல்யாணமா?

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:03 am)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 936

மேலே