சரித்திரநாயகன் சமநீதிக் காவலன்

சரித்திரநாயகன் சமநீதி காவலன்..!

சாதிமத மில்லாத சரித்திரம் படைத்தாயேயுன்
சருமமே தீயென கொதித்திட யிவ்வுலமே -
தூரமாய் போனதால் துயரங்க ளடைந்ததோ
துடிக்கும் தீண்டாமை முள்வைத்து..!

இரவுபகலு இருந்தாலு மிதயத்தி லொளிவைத்து
இருள்நீக்கி பகலாக்கி யெரிகின்ற விளக்காகவுன் -
விழிகாணு மிடியலை எதிர்பாரா விருந்தாகுமுன்
வழிகாட்டு மெண்ணமெனில் வருமோ..?

ஆண்சாதி பெண்சாதி அடைந்தாளுன் பொஞ்சாதி
அறிவாலே யுணர்வோரே அடக்கி வைத்தவனோ-
யுன்னுறவு இல்லாம லுயிர்வாழ முடியாதெனும்
யுண்மையை மறந்து போவதேன்..?

பிஞ்செனு மொளைகூட பிழையாகு மறையுமுன்
பாராத முகத்தாலே யெவரறியா வொருநோயால்-
வேண்டியு மேண்டாதவனு பிரிவொன் றில்லாது
வாழ்க்கையி னொளியது நீயன்றோ.!

அறியாத பிள்ளைக ளறிகின்ற பள்ளியிலும்
ஆணியென குத்தி யதன்மேலே அமரவைக்கும் -
அவலத்தி னடையாள சாதியினை யெதிர்க்கவுன்
சக்தியினை கொடுத்து விடு..!

எல்லையிலா அன்புக் கென்றென்று முன்வாழ்வு
யென்றெண்ணு முலகினி லினியேது பாகுபாடு
ஆறறிவை யழித்துவரும் சாதிமத சமூகத்தில்
அறிவுக்குள் ஆழுணர்வா யுன்வாழ்வு..!

எழுதியவர் : வாழ்க்கை (27-Jan-15, 10:22 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 51

மேலே