ரகசிய குறுஞ்செய்தி

மழை சிலுப்பி
வெற்றிடத் துளிகள்
ஆகும்
காகத்தின் கரையாமை
நள்ளிரவு மின்னலில்
யாரோ வரைந்த
அசரீரி....
--------------------------------------------
ஜன்னல் அடைத்த பின்னும்
பெருமழை
அறை நிரம்பித்
ததும்ப, வழி மாறிய
கனவு
மலை மீதிருந்து
குதித்து
அருவியாகிறது.....
-------------------------------------------------
ஆழ்ந்த தூக்கத்தில்
புரண்டு படுக்கையில்
நெற்றி படும் இதழ்கள்
ரகசிய குறுஞ்செய்தி
ஒன்றை
அனுப்புகிறது.....
----------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (27-Jan-15, 1:57 pm)
பார்வை : 230

மேலே