மனமே மரமாயிரு

முள்ளு காட்டில் சுள்ளி தேடி போகையில
புல்லு பூண்டாகி மேனி முள்ளாகி
எங்கும் பச்சை மீளா நேரத்திலும்
அங்கும் நீ அருள்வாய் !!

தோப்பாய் கண்டுகண் பொருக்கா
தோடர் உன்னைதொட்டு கைகூப்பி -பின்
பம்பரமாய் சுத்தி சுத்தி வாலெடுபான்
ரத்தம் ஒழுகிட துடிப்பாய் !

கண்மாய் குளம் நிறைஞ்சு கிடைக்கையில
நஞ்சை காடுழுது தலை வெட்டி மிதிப்பானே விவசாயி
பொனமாய் புதைஞ்சு பொன்னாய் மணிதருவாய்
உன்னால் வாழ்ந்த குடி மண்ணாய் போனதிப்போ !

எழுதுகோளுக்கு உறையானாய் எழுதிடும் காகிதமானாய்
உழுது பிழைப்போர்க்கு ஏர் கலப்பையானாய்
அமரும் ஆசனமானாய் உயிர் காக்கும் வாசலுமானாய்
எத்தனையோ உயிருக்கு வாழ்வானாய் நீ மட்டும் மரணித்து !

மழையை மண்ணுக்கு அழைத்தாய் மனிதன் வாழ
கிளையை விறகாக்கி பலர் வயிற்றில் பால் வார்த்தாய்
வாடிய உயிருக்கு நிழலாய் பல உயிர்க்கு குடிலானாய்
பாடிய பறவைக்கெல்லாம் தாயானாய் !

எழுதியவர் : கனகரத்தினம் (27-Jan-15, 11:20 pm)
பார்வை : 160

மேலே