===+++பேதைகளே சிந்திப்பீர்+++===
நாவற் காய்த் துவர்ப்பு
நல்ல தொரு அருமருந்து
நாத்திகனின் நா பகிர்ப்பு
நல்லறிவின் உளி கூர்ப்பு...
நாதனாம் நல்லானாம்
நாற் றிசை வல்லானாம்
இவன் பெயர் பிதற்றுகின்ற
பேதைகளே கேளீர் கள்...
தாரு கா வனத்தினிலே
அடுத்தவன் மனை யாளை
புணர்ந்து புசித்தவனை
நல்லா னென விளிப்பாளோ
நற்றமிழ் பேதை மகள்...
ஊர் சொல் பொறுக்காமல்
உடையவள் தனை விரட்டி
வயிற்றில் பிள்ளையுடன்
வனத்தில் விட்டவனை
உத்தம புருடனென உண்மைப்பெண் பறைவாளோ
அக லிகைகள் கதையறிந்த
அன்னைத் தமிழ் பிராட்டிகளும்
வடவாண்டி புரட்டுகளை
வாயார புகழ் வாளோ...
பதிவிரதை பிருந்தையவள்
நிலையறிந்தால் நம் பெண்டீர்
புத்தி யதை தீட்டாமல்
பக்தி யதை தீட்டுவாளோ...
பெண்கல்வி யற்ற நாளில்
காமத்தையும் கதைக ளாக்கி
பெண்ணியத்தை இழிவு செய்த
புராணத்தை வணங்குவாளோ...
கண்ணிருந்தும் குருடாக
கைகூப்பி நிற்பவளே
நற்சிந்தை பலவோடும்
துற்சிந்தை மிகுந்துண்டு,
பேதைகளே சிந்திப்பீர்
பெண்ணியத்தை உந்துப்பீர்
----------------நிலாசூரியன்.