எதிர்பார்ப்பில் நான்
எதிர்பார்ப்பில் நான் ....
தொலைவினில் நீயிருக்க
உன்னை தொடரவே செய்கிறேன் ...
ஏதோ ஒரு மணித்துளியில்
சந்திப்பு நிகழும் என்று...
நிறைய பேச பல
செய்திகளை சேகரிக்கிறேன்...
அன்புள்ளவர் சந்தித்தால்
மௌனமும்,விழியும் தான் பேசுமாம் ...
நானும் அதுபோல் சேகரித்ததை
சொல்லாமல் நிற்பேனோ ...
என் மௌனம் பேசுவதை
புரிந்து கொள்வாயா ...
என் விழியில் அன்பை
புரிந்து கொள்வாயா ...
எதிர்பார்ப்பில் நான் ....
- வைஷ்ணவ தேவி