உன் பாதம் ஒரு சொர்க்கம்

இந்த
நொடி பூமியில்
பூத்த பூக்களெல்லாம்
மறுநொடியே
இறக்கும் என்றால்

அவை
அத்தனையும் பறித்து வந்து
உன்
பாதத்திற்கு பரிசளிப்பேன்

இன்னும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு
உன் பாதத்தில்
பத்திரமாய்
அவை உயிர் வாழும்.



ஏனோக் நெஹும் .

எழுதியவர் : ஏனோக் நெஹும் (28-Jan-15, 4:21 pm)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 500

மேலே