தெருவோரக் கூத்தாடி கில்லாடி
கும்மாளம்
கும்மாளம்
போடுதையா
என் காலும் நீ
போட்டுக்கையா
தாளம்..........................
கம்முன்னு
கும்முன்னு
ஓரமாக நின்னு
பார்த்துக்கையா
நீயும்..........................
கண்ணக்
கண்ண
உருட்டுவேன்
கையக் கைய
நீட்டுவேன் நீ
துட்டுக் கொடுக்க
வேண்டுமையா
ஏ....ராசா...............
வளைந்தாடுவேன்
சுருண்டாடுவேன்
நெளிந்தாடுவேன்
நிமிர்ந்தாடுவேன்
போதையில்
தழ்லாடுவேன்
கண்டுக்காதே
ஏ...கண்ணாயிதம்.......
சலங்கை கட்டிஆடுவேன்
கொலுசு குளுங்க ஆடுவேன்
நீ தொட்டு இறுக்க இழுக்கும்
போது நொறுங்கும்
வளையல்களை
மிதித்தாடுவேன்........
உன் சீமையிலே ஒரு
பங்கு கேட்டுப் பாடுவேன்
என் சின்னப் பண்ண
சின்ன மகனே...............
கட்டிய மல்லிகை
கொட்டும் வரை குதித்து
ஆடுவேன் கூடவே உன்னை
அணைத்தாடுவேன் ( தஸ்)
(புஸ்) என்று இங்கிலிஸ்சியில்
கிழிக்கும்
இங்கிலாந்து மைனரே.......
நான் நடு ரோட்டு மேல
கூத்துக் கட்டுவேன்
எங்க நாட்டுமேல
நோட்டமிட்டா ஓட்டம்
காட்டுவேன்..................
நான் சும்மா அக்கா இல்ல
சொர்னக்கா சுண்டக்கா
இல்ல பாவக்கா நீ பக்கடித்துப்
பார்க்காதே பக்குபமாக உன்
கதையை முடிப்பா இந்தக்கா.......
போடா போடா மக்கன்
எத்தனையோ வசப்பாட்டு
நான் கொடுத்தேன் பாட்டில்
இது புரியாத நீயும் ஒரு மாங்கா........