இருப்பதை சிக்கனமாக்கி இயற்கையை சேமிப்போம்

அற்று போன வாதியால்
வற்றி போனது வாழிடம்
தோற்றி பரவிய வதந்தியால்
பற்றி எரியுது மொழி தீ !

அணையுடைப்போம் குழு ஒருபுறம்
அணைகாப்போம் குழு மறுபுறம்
ஆதரிப்பது யாரை அவஸ்தையில் அரசு
அகண்ட மேனி குறுகி கருகியது பயிறு !

உனக்கா? எனக்கா? தேக்கத்தில் சண்டை!
இதுக்கா ?அதற்கா? எதற்காக பொழிந்தது மழை!
இயற்கையா ?செயற்கையா ?இழுபறி நிலை
வாழ்வா ?சாவா ?போராட்டத்தில் நதிநீர் !

உரிமை கொண்டாடும் மக்களே
ஊற்று நீரை உருவாக்க உம்மால் முடியுமா ?
மேட்டில் தேக்கிய நீரால் ப(உ)ள்ளமே பயத்தில்
பகை நாட்டிற்கும் பங்கிடும் சனமே
உள்நாட்டில் ஏனில்லை இந்த மனமே !

நடந்த நதியை முடமாக்கி
கிடந்த நீரையும் வீணாக்கி
படர்ந்த நதிமணலை குடியாக்கி
அடர்ந்து வாழ அருகதையற்ற ஜென்மங்களே!!

நாடெங்கும் வறட்சிகண்டும் வற்றாது
வீடெங்கும் கூவம் நதியாய் ஓட
வீணென்று உணராது வீட்டு நீரை நதியாக்கி
ஆற்றுநீர் வரவில்லையென ஆர்பாட்டம் செய்வது சரியா ?

பொதுநலமாய் கருதாது! சுயநலமாய்
சுருங்கிப்போன இதயத்தாலே...
சுடுகாடாய் இயற்கையெல்லாம்!!
இல்லையென்றதும் துடிக்கிறீரே?
இருந்த போது இழந்தீரோ அறிவு !

சுதந்திரத்திற்கான போராட்டம் போய்
சோற்றிற்கு போராடும் காலத்தை உருவாக்கி
தண்ணீருக்காக கண்ணீரால் வாடும் நாளையதேசம் !
சந்ததிக்கு சேர்க்கும் சொத்தாய் நினைத்தேனும்
இயற்கையை சேமியுங்கள் !

இலவசமென்றால் அவ்வளவு இளைப்பா?
இனாமென்றால் இத்தனை அலும்பா ?
இயற்க்கை எண்ணி கொதித்தால்
இருக்குமா இந்த பூமியும் (ஆ)சாமியும் சிந்தியுங்கள் !!

எழுதியவர் : கனகரத்தினம் (28-Jan-15, 10:37 pm)
பார்வை : 134

மேலே