சிகப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
சிரிப்பில் கன்னம் சிகப்பாம்
சினத்தில் கண்களும் சிகப்பாம்
வாழ்வில் வறுமை சிகப்பாம்
வானவில் வர்ணத்திலும் சிகப்பாம்
உயிரின் உதிரம் சிகப்பாம்
உழைப்போர் உணர்வும் சிகப்பாம்
அபாய அடையாளம் சிகப்பாம்
ஆகாய ஆதவனும் சிகப்பாம்
மனதை மயக்கும் சிகப்பாம்
மாதுளை முத்துக்களும் சிகப்பாம்
நெருப்பில் தெரியும் சிகப்பாம்
நெகிழும் நெஞ்சமும் சிகப்பாம்