இயற்கை
கவியெழுதத் தெரியவில்லை
கற்றுக்கொடு என்று மலரிடம் கேட்டேன் :
மானைப் போய் பார் என்றது
ஒயிலும் ஓட்டமும்
ஒருசேர வேண்டுமென்று மானிடம் கேட்டேன்:
மரத்தைப் போய் பார் என்றது
நீட்டலும் சுருங்கலும்
கற்றுக்கொடு என்று மரத்திடம் கேட்டேன்:
மலையைப் போய் பார் என்றது
திடமும் வீரமும்
தினமும் வேண்டுமென்று மலையிடம் கேட்டேன்:
அலையைப் போய் பார் என்றது
ஆழமும் அகலமும்
அணிசேர வேண்டுமென்று அலையிடம் கேட்டேன்:
இயற்கையைப் போய் பார் என்றது .
இயக்கவும் ஆக்கவும் தெரியவில்லை
அறியவை என்று இயற்கையிடம் கேட்டேன்:
என்னைப் பார் எல்லாமே நான் என்றது .