பெருந்தன்மை

சித்திரை மாதத்துப்
பிற்பகலின்
வியர்வை பிசுங்கும்
பேருந்துப்
பயணமொன்றில்
தாயின் மடியில்
நின்றவாறு
சன்னல் கம்பி பற்றி
வேடிக்கையில் லயித்து
மழலை பேசிவரும்
ஒரு குழந்தையைப் பார்த்து
உங்களுக்கோர்
கவிதை தோன்றினால்,
சட்டென்று அதை
உங்கள் அலைபேசியில்
தட்டச்சும்
அம்முயற்சியைக் கைவிட்டு
சட்டென்று
அக்கவிதைக்கு
வாசகராகி
வெறுமனே ரசித்துவிட்டுக்
கடந்து போகும்
பெருந்தன்மை
உங்களுக்கிருக்கிறதா ?

எழுதியவர் : குருச்சந்திரன் (29-Jan-15, 11:32 pm)
Tanglish : perunthanmai
பார்வை : 278

மேலே