சூன்ய கணக்கு

பனித்துளி சிந்தும் பரவசம் காண
பகலவன் தோன்றி சிரிக்கும் பொழுதில்
மரங்கள் செடிகொடிகள் பூத்த மலரால்
வரவேற்கும் காலை அழகு.!

மழைவரு மென்று மனதினு லெண்ணிக்
குடைதனைக் கையில் சுமக்கும் தினங்கள்
பொழியா மழையோ குடையற்ற நாளில்
குளித்திடச் செய்யும் சதித்து !

கொட்டும் மழைக்காலம் கோடை நலமென்றுத்
திட்டும் மனமோ, திரும்பியோர்நாள் சுட்டெரிக்கும்
வெய்யில் பொழுது வருத்த நினைக்குமே
பெய்யும் மழைசிறப் பென்று.!

அடைமழை பெய்து அகிலம் நனைந்து
விடைபெறும் காலம் விரைவாய் நடைபயின்று
வந்தெரிக்கும் சூரியன் வாராத மண்மேலே
சுந்தரம் சூன்ய கணக்கு!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Jan-15, 11:52 pm)
பார்வை : 109

மேலே