+ஆயுள் கைதி+

உன் கைவிரலுக்குள்
மாட்டிக்கொண்ட கைதியாய் நான்...

நீ என்ன சிலந்தியா..
என்னை இப்படி பின்னிவிட்டாயே!

நீ சிலந்தியாகவே இருந்துவிட்டுப்போ..!
என்னை மட்டும்
பூச்சியாக நினைத்து தின்றுவிடாதே..
வலையினைப் பின்ன கொன்றுவிடாதே..

மாட்டிக்கொள்வேன் என்று தெரிந்தே
வந்து விழுந்தேன்..

வீழ்ந்து விட்டேன் என்று அறிந்தே
மயங்கி கிடந்தேன்...

விடுதலையை நான் கேட்கவில்லை..
கைதியாகவே வைத்திரு...
ஆயுள் கைதியாக...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Jan-15, 12:03 am)
பார்வை : 194

மேலே