உயிர்ப்பிக்கின்றேன்

உயிர்ப்பிக்கின்றேன்
உன் கருவிழிகளை கண்ட
பின் தான் என் வாழ்க்கை
புத்தகத்தில் கன்னிக் கவிதை
எழுதினேன்.

வட்டமுக கன்னக்குழி மச்சம்
உன் புன்னகையோடு சேர்கையில்
தேவதையாகிறாய்.

நிலவாக உன் முகம் காணயிலே
என் இதய மெழுகில் அக்கினி
மூட்டி துடிதுடிக்கச் செய்கிறாய்.

நீ வண்ணக்குடை பிடித்து
சாலையில் நடக்க வானவிலே
உன்னுருவில் காண்கிறேன்.

உன்னோடு வாழும் ஆசையால்
தென்றலான உன் எண்ணத்தை
சுவாசமாக இதயத்தில் ஏற்றி உயிர்ப்பிக்கின்றேன் .

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (29-Jan-15, 12:06 am)
பார்வை : 122

மேலே