வாழ்ந்துவிட்டு விழி

உன்னை முறைத்த
ஒருவரின் சிரிப்பை
காண்.
பூமி களவாடப்படுகிறது
விரைந்து சென்று
காப்பாற்று.
பார் அக்குழந்தையின்
ஒவ்வொரு சிரிப்பும்
காற்றில் மிதக்கிறது.
இதோ பட்டுவிட்ட
உன் வீட்டுச் செடியில்
மின்னுமிலைகள்.
புரிகிறதா நீண்டநாட்களுக்கு
பிறகு இப்பொழு தான்
உன் பிள்ளை
நெஞ்சிலுதைத்து
விளையாடுகிறது.
உனக்கும் புன்னகைக்க
தெரியுமென
விளங்குகிறதா.
அதோ சில யுகங்கள்
கடந்த பின்னும்
உன் முற்றத்தை விலகாமல்
இருக்கிறது நிலா.
மெதுவாகவே ருசி
அது தீராத தேன் கோப்பை.
உனக்காவது புரியும்பார்
மரமிழந்த அப்பறவையின்
கண்ணீர் மொழி.
பெட்ரோல் புகையிலும்
பேரிரைச்சற் பணியிலும்
பகலெல்லாம்
பாழாக்கியிருப்பாய்.
தூங்கும் நேரம்வரை
அத்தூசி நினைவிலேயே
தொலைந்திருப்பாய்.
சாதிப்பதிருக்கட்டும்.
கனவிலாவது
வாழ்ந்துவிட்டு விழி.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (29-Jan-15, 2:36 am)
பார்வை : 72

மேலே