கடவுளின் கணக்கு

காலம் தோன்றியது முதல்
கால் ஊன்றிய நிலை வரை
பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும்
இடையில் நகர்ந்துகொண்டேயிருக்கும்
ஒரு நடைவண்டியை போல் நாம்..

நன்றிகெட்ட ஜென்மங்களாய்
தொன்றுதொட்டு தொடர்வதனால்
நமக்கும் நட்புக்கும் நடுவில்
மறைந்து கொண்டேயிருக்கும்
மாலைநேர கதிரவனைப் போல்..

காவலுக்கு கற்களை கடவுளாய்
படைத்த மனிதநாகரீகம்
காப்பகத்தில் பெற்ற தெய்வங்களை
மிருகமாய் அடைப்பது
எவ்வகை நியாயம்..

உறவுகளை சுமையென ஒதுக்கி
உணர்வுகளை தனக்கென செதுக்கி
காண்பதெல்லாம்
கையகப்படுத்தும் கயவர்களின் நிலை
இன்று
மூட்டைகள் சுமக்கும் கழுதைகளாய்..

நட்பின் போர்வையில் நரிகளென
கொத்திக் கொறிக்கும் குருவிகளென
அடிபட்ட இடமெல்லாம்
அடையாளமாய் நிலைக்கும்
ஆறாத ரணங்களின்
தீராத வலிகள்..

பஞ்சத்தின் பாயில்
பட்டினி சுருண்டிட
குருடனின் பாதையில்
பாதாளம் படுத்திட
ஊமையின் பார்வையில்
பாம்புகள் ஊர்ந்திட
செவிடனின் காதுகளில்
சங்கீதம் ஊளையிட
வெளிறிய நிலையில் உலகம்
வெள்ளை வண்ணமாய் பணி நிகழும்.

எழுதியவர் : அன்வர்தீன்.. (29-Jan-15, 3:06 am)
Tanglish : kadavulin kanakku
பார்வை : 100

மேலே