கிராமம் காணாத தொப்பை

வேலைசெய்யும் தொழிலாளியும்
ஆளை ஏய்க்கும் முதலாளியும்
ஆகிட்டானே குண்டு !
அதுக்கு அர்த்தம் பல உண்டு!

கொடுத்த பணத்திற்கு நியதியாக
எடுத்த வேலையை முடிக்காவிட்டால்
கொளுத்த பணத்திற்கு வியாதியாகி
அழுத்து போன மேனியாக கூடும்! இதில்
மெய்மையுண்டா நீயே கூறடா?!!

சோற்றிகாக பிழைப்பை தேடி
கிராமம் விட்டு நகரம் வந்து சுகவாசம் கண்டவுடன்
வெறுத்துபோகும் கிராமம்தானடா-உன்
வேதனைக்கும் வடிக்காலாகும் பாராடா !

டிராக்டர் வண்டியை ஓரம் கட்டி
ஏர் கலப்பையில் எருதை பூட்டி
வயலில் இறக்கி உழுது பாரடா
தொப்பை அங்கே மாயமாகுமடா !

பெருந்தொழிலதிபர் ஆனா போதுமா?
பெருத்த உடம்பும் தானா குறையுமா !
வேர்க்க விருவெருக்க வேலை செய்தா
வியாதியுந்தான் உடம்பில் அண்டுமா?

கிணற்று நீரில் குதித்து நீயும் நீச்சல் அடித்துபாரு !
நோயற்று உடல் இளைத்து உருவம் மாறிவரும்
உனக்கும் தெரிந்தும் மறந்துபோன மர்மம்தானடா !
மணக்கும் மேனி இருந்தும் கணக்கும் தொப்பை
பொனக்காக உனக்கும் இது அவசியமானதடா !

கண்ட நேரத்தில் உறங்கி தொலைச்சி
கண்ணில் கண்டதை வாயில் நுழைச்சி
ஊதி போன பலூனாட்டம் உடம்பை பாருடா!
வீதியில் நடந்து போகும் யானையாகி போவதேனடா !

அழகுக்கு அழகூட்டும் பசுமை காணும் கிராமமதில்
பழகும் மக்கள் பாசம் உனக்கு புரியுமா?-உனைப்போல்
மோசம் பண்ணும் குணம்தான் அங்கு வளருமா ?
காசு பணம் இல்லாட்டியும் நாதியற்று நிற்பது நோய்தானடா !

எழுதியவர் : கனகரத்தினம் (28-Jan-15, 11:53 pm)
பார்வை : 265

மேலே