என் அறைக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி

என் அறைக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி

தொலைக்காட்சி
வழிந்து கொண்டிருக்கும்
இரவுப்பணி முடித்த
என்
பிற்பகல் தருணமொன்றில்
திடுப்பென்று
என் அறைக்குள்
நுழைந்து விட்ட
ஒரு பட்டாம்பூச்சி
சற்றே திகைத்து
அந்தரத்தில்
வட்டமடித்து
வந்த வழியே
விருட்டென
வெளியேறியது !
இவ்வாறாக,
தொலைக்காட்சி
வழிந்து கொண்டிருக்கும்
இரவுப்பணி முடித்த
என்
பிற்பகல் தருணமொன்றில்
திடுப்பென்று
என் அறைக்குள்
நுழைந்து விட்ட
அந்தப் பட்டாம்பூச்சி
எதுவுமே செய்யாமல்
வெளியேறியது
என் அறையை
பட்டாம்பூச்சி நுழைந்த
ஓர் அறையாக மாற்றிய
அந்த
அற்புதத்தைத்தவிர !

======================

எழுதியவர் : குருச்சந்திரன் (29-Jan-15, 6:04 am)
பார்வை : 148

மேலே