இளந்தென்றலே

இளந்தென்றலே.....

தென்றலே, இளந் தென்றலே
மெல்லிடையால் வெல்பவளே,
மெல்லினமும் முகிலினமும் தோற்றிட,
நடை பயின்று செல்வாயே...

இதமாய் மனதை வருடிவிட்டு,
இதயத்தை எடுத்து சென்றவளே, உன்
மென்மையான குணத்தாலே,
ஆண்மகனையும் வெல்பவளே...

பெண்ணே, நீ மென் காற்றாகி,
கட்டழுகுடன் கவர்ந்திடுவாயே... சிறு
கோபங் கொண்டால் சுற்றும் சுழலாய்
தோன்றிடுவாயே...

என்னவளே, என் இனியவளே,
உயிர் வளியாய் என்னில் வந்து,
உயிர் மொழிந்து சென்றாயே,
உயிர் எடுத்தும், உயிர் கொடுக்கும்
வித்தைக்காரியே... நீ விந்தைகாரியே...

கண்ணசைவில் கொள்ளையடிப்பவளே, உனை
கடத்திட நினைத்ததால், கத்திடுவாயே!
கள்வனின் கண் பட்டால், குமுறுவாயே, உனை
அடைந்திட நினைத்ததால், கொன்றிடவும் செய்வாயே...

என் வளியானவளே, நீ செல்லும் வழியே
குறுக்கிட்டால், பின் சூறாவளியே! விரைந்து
சுழன்றோடிச் சென்று சூரையாடிடுவாயே...

சாமுத்திரிகா லட்சணமே, பெண்ணே நீ
சான்னிதிய ரூபமே ....
சுதந்திரமாய் சுற்றுபவளே, பெண்ணே நீ
சுகமாய் வாழிய வாழியவே !!!!!

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (30-Jan-15, 9:38 am)
பார்வை : 112

மேலே