அக்னி தேவதையே

அக்னி தேவதையே..

அக்னிச் சுடரே , நீ
அக்னி தேவதையே,
நீதியை நிலைப்பவளே, நீ
அநீதியை எறிப்பவளே...

அகிலத்தை காப்பவளே, நீ
அக்கிரமங்களை ஒழிப்பவளே,
தீச்சுடரே நீ,
தீயவர்களின் அழிப்பானே...

உற்றார் பழித்திட, ஊரார் ஒதுக்கிட
என்ன பாவம் செய்தாயடி ? உம்
மானம் காத்திட, இவ்
அவமானங்கள் தேவையாடி ?

அல்லும் பகலும் அழுதழுது ,
ஆடை அணிகலன் அறுந்து விழுந்து,
இன்பம் துன்பம் மறந்திறுந்து,
ஈவு இறக்கம் காணாது
உதறி தள்ளி போனதாரோ ?

கண்ணகி காணாத துன்பமா? அவள்
கண்ணீரை உன் துயர் மிஞ்சுமா ?
பெண்ணுரிமைக் கென்ன பஞ்சமா ? உன்போல்
பேதைக்கு சாவுதான் தஞ்சமா ?

எழுந்து வா பெண்ணே , நீ
துணிந்து வா முன்னே,
நிலமகளே நீ,
நீலக் கடலிலே,
புயல் காற்றாய்,
வானுயர்ந்து ,
தீப்பொறியாய் ,
தகர்த்தெறிய வா....


ஜனனமோ ,
இல்லை மரணமோ ,
ஜகத்தினை காத்திட வா...
மாறிவா.... மாற்றிட வா.....

எழுதியவர் : (30-Jan-15, 10:54 am)
Tanglish : akni thevathaiye
பார்வை : 77

மேலே