மொழி பேசும் கயல்விழியாள் 555

என்னவளே...

என் விழிகள் உன் விழிகளை
பிரிந்ததுண்டு...

என் செவிகள் உன் மொழி
கேளாமல் பிரிந்ததும் உண்டு...

தேனான உன் கனி இதழை
என் இதழ்களும் பிரிந்ததுண்டு...

தங்கத்தை கடலில்
உருக்கி ஊற்றிவிட்டு...

அந்திநேர கதிரவனும்
பிரிந்து செல்கிறான்...

நான் காண நீ காத்திருக்கும்
உன் வீட்டு மாடியில்...

நீ இன்னும் வரவில்லை...

உன்னைவிட்டு நான் சென்றது
என்னவோ இரண்டு நாட்கள்தானடி...

உன் அனுமதியோடு...

உன்னை காண காத்திருந்த
என் விழிகளும் ஏங்குதடி...

உன் கனிஇதழ்களின்
மொழிகளை கேளாத...

என் செவிகளும் ஏங்குதடி
உனக்காக...

ஒருமுறை வந்து செல்லடி
உன் வீட்டு மாடியில்...

காத்திருக்கிறேன் நான்
உன்னை காண.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jan-15, 5:17 pm)
பார்வை : 253

மேலே