பிரிவு கவிதை
*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*