இதோ முடிவுகள் - பொங்கல் கவிதைப் போட்டி 2015
வணக்கம் தோழர்களே....
தைப்பொங்கல் கவிதைத் திருவிழா மெதுமெதுவாய் நகர்ந்து இறுதி கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கின்றது தற்போது.
முதற்கண்-போட்டியில் பங்குபற்றி விழாக்குழுவினரை பெருமைப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் !
ஒரு போட்டி நடாத்தப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவோம். போட்டி நடாத்துவதனால் போட்டி நடாத்தும் செயற்குழுவினருக்கு பல்வேறு பிரதிபலன்கள் இலாபங்கள் வந்து சேரும் என்பதும் வெளிச்சம்.
ஆனால் இந்த கவிதைத் திருவிழா என்ற செயற்றிட்டத்தை ஒரு மாதகாலமாய், பல்வேறு இடர்களுக்கு சிக்கல்களுக்கு மத்தியில் வேலைப்பளுவினையும் புறக்கணித்து நடாத்தி முடித்திருக்கின்றோம் என்பதில் மொத்த விழா குழுவினரும் பெரும் திருப்தி அடைகின்றோம்.
மூன்று தலைப்புகள் வழங்கப்பட்டு அதன் மூலம் பத்தொன்பது படைப்பாளிகளுக்கு பணம் மற்றும் ஆறுதல் பரிசில்களை வழங்க தீர்மானித்திருந்தோம்.
“நடுவர் தீர்ப்பு” என்ற தொடரின் மூலம் இந்த விழாவில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் பற்றியும் நாம் பெற்றுக் கொண்ட விடயங்கள் பற்றியும் நடுவர்கள் வாயிலாகவே சொல்லி இருந்தோம். இந்த படைப்புகள் அனைத்தையும் படைப்பாளிகள் அனைவரும் மீள மீள வாசித்து தம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்ளவேண்டும் என்பது எங்களது அன்புகலந்த அக்கறையுடனான வேண்டுகோளாகும் !
முன்னூறுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்குபற்றிய இந்த போட்டிகள் நான்கு கட்டங்களாக பரிசீலிக்கப் பட்டன. அவற்றுள் மிகச் சிறந்த கவிதைகள் ஒன்பது இறுதி முடிவுகளுக்குள் இருக்கின்றன.
ஏதோ ஒரு சில காரணங்களால் கடைசி ஒன்பது கவிதைகளுக்குள் இடம்பிடிக்க முடியாத கவிதைகளுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்க முன்வருகின்றோம்.
அந்தவகையில் மூன்று தலைப்புகளிலும் எழுதப்பட்டிருந்த படைப்புகளில் நடுவர்களின் தீர்ப்பின் படி தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறுதல் பரிசு பெறும் படைப்பாளிகள் இவர்களே.....
1. 228676 - vivekbarathi (இ)
2. 229198 - உமை (சா)
3. 228283 - saravanaa (நா)
4. 229317 - ரோஷான் ஏ.ஜிப்ரி (இ)
5. 228341 - மணியன் (இ)
6. 227954 - இராஜ்குமார் Ycantu (இ)
7. 227691 - Sujay Raghu (நா)
8. 227998 - இணுவை லெனின் (சா)
9. 229102 – யாழ்மொழி (சா)
10. 227705 - ஜாக்.ஜி.ஜெ (சா)
---------------------------------
இ – இப்படி நாம் காதலிப்போம்
நா – நாளைய தமிழும் தமிழரும்
சா – சாதி ஒழி! மதம் அழி! சாதி !
---------------------------------
ஆறுதல் பரிசுபெறும் படைப்பாளிகள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி கெளரவிக்கின்றோம். இந்த படைப்பாளிகள் பத்து பேரும் தங்களது வீட்டு முகவரியினையும் தொலைபேசி இலகத்தினையும் மதிற்பிற்குரிய தோழர் அகன் அவர்களுக்கு தனிவிடுகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
உங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஒன்பது சிறப்பு படைப்பாளிகள் யாரென்று அறிந்துக் கொள்ள........
ஒரு மாதம்......
ஒரு வாரம்.....
ஒரு நாள்.....
அல்ல..அல்ல..அல்ல....
ஒரே ஒரு மணித்தியாலம் காத்திருங்கள்.....!
============================காத்திருத்தல்...இன்னும் சுகமானதே.....!