இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு
இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
புவியின் மேலே புழுதி கிளப்பிடும் கவி படைக்க!
இருண்ட என் சமுதாயத்தின் இதயம் அது உடைக்க!
மனிதம் மறந்தொரின் மறு முக தோலுரிக்க!
இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
புரட்சி எழுத்துக்கள் புதிதாய் நான் படைக்க!
எழுதும் வரிகளில் என் இனத்தின் வலியுரைக்க!
கனவு சிதைந்தோரின் கண்ணீர் அது துடைக்க!
இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
காலத்தை மாற்றும் கனத்த ஒரு கவி படைக்க!
கோலமழிந்த என் இனத்தின் கொடியதொரு வலி அறுக்க!
சிதலமாய் சிதறிய மனத்தில் சிலுக்கும் வலு சேர்க்க!
இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
உலகம் உலுக்கும் உண்மையொரு கவி படைக்க!
இழந்த நகை அது என் இன முகமதை அணைக்க!
உடைந்த கைகள் கணை ஏந்தி பாவியின் தலையறுக்க!
இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!