என் தந்தைக்கு பத்தாமாண்டு பத்மாஞ்சலி

ஆண்டுகள் பத்து உருண்டோடி விட்டது – ஆனால்
உன் ஞாபக நரைகள் எங்களை பாடாய் படுத்துது….!
மறக்கத்தான் முடியவில்லை உன் மரணத்தை…;
உரக்கத்தான் வாசிக்கின்றோம் உன் நாமத்தை…!
உழைப்பின் உன்னதத்தை உன்னிடம் கற்றதால்தான் – எங்கள்
பிழைப்பு இன்றும் தப்பில்லாமல் தடம் பதிக்கின்றன…!
மடிப்பு கலையாமல் நீ போடும் இஸ்த்திரிக்கு….,
மதிப்பும் மரியாதையும் கொடுத்த விசிறிகள் பல பேருண்டு… !
அற்புதமானவரே…! ஆண்டுகள் ஓடினால் என்ன..?
மார்கழிப் பூக்கள்ப்போல் நீ எங்கள் நெஞ்சங்களில்
போர் பரணி பாடிக்கொண்டிருக்கிறாய்.. !
கார்கால மேகங்களாய் உங்கள் கண்ணீரை சுமந்தபடி….
எங்கள் கண்கள்…!

எழுதியவர் : இரா.மணிமாறன் (31-Jan-15, 7:19 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 59

மேலே