என்னோடு வா

எல்லா சொத்துகளும் இழந்து
கிழக்கை புறந்தள்ளி
மகனுடன்..மேற்கு நோக்கி
நடக்கின்ற மனிதரின் கால்களில்
தட்டுப் பட்டது கண்ணாடி துண்டு ஒன்று..
பின்னால் வருகின்ற சூரியனை
கண்ணாடியில் பார்த்தபடி
முன்னேறி நடந்தவர்
நின்றார்..
திரும்பி சூரியனை நோக்கி..
உரத்த குரலில்
" எல்லாம் இழந்து விட்டேன் என்று எண்ணாதே..
உன்னையே எடுத்து செல்கிறேன்.." என்று சொல்ல
சிறுவன் சிரிக்கிறான் ..
சூரியனை நான் தூக்கி வருகிறேன்
என்று கையை நீட்டி
வாங்கிக் கொண்டான் !