வாழ்ந்து கொண்டு தானா இருக்கிறோம் - தினம் தினம்

வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் –தினம் தினம் .
வாட்டம் கொள்ளாமல் நன்றாய் நோட்டமிடு !!
வாழ்ந்து கொண்டு தானா இருக்கிறோம் ?? – தினம் தினம் ???

வெற்றியை நோக்கி வெறித்தனமாய் ஓட்டம் - அதன்
அர்த்தம் புலப்படாமலே முடிந்து விடும் ஆட்டம் !!
சுற்றத்தார் நாட்டமே நமதென கொள்ளும் மயக்கம் -அடைந்ததும் அவற்றை,
இதுதானோ நம் வேட்கை என்றே வாட்டம் !!

சிறகுகள் விரிக்க ஆசையாம் – சேரும் இடம் சிந்திக்காமலே!
புகழ்ச்சியில் பொசிந்துவிடும் பயணம் - தன்னை அறியாமலே!
'நாம்' என்ற பன்மையில் நசிந்துவிடும் தன்மை
நினைத்து பார்த்தால் .. . இதற்காகவா 'நாம்' ???

வாழ்ந்து கொண்டு தானா இருக்கிறோம் ?-இல்லை,
வீழ்த்தி கொண்டிருக்கிறோமா நம்மை ? .. தினம் தினம்!

எழுதியவர் : ஷிவிரா (31-Jan-15, 5:55 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 59

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே