ஆத்த நான் பாஸ் ஆகிட்டேன்

தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிவிடும்.....
பெற்றோர்களின். முகத்தில் தேர்வு முடிவுகளின் பயம் தொற்றிக் கொண்டது ...



முடிவுகளை அறிவிக்க உயர் அதிகாரிகள் அங்கே வந்தனர் .....

"நாம்ம புள்ள இந்த பரிச்சய எப்புடி எழுதிருக்கானோ தெரியலையே"??????... என்று பாலாவின் பெற்றோர் அங்கே புலம்பிக்கொண்டு இருந்தனர்....

எதுவுமே நடக்காதது போல் பாலா அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டு இருந்தான்...... "டேய் பாலா , இங்க வந்து நில்லுடா.. அங்க என்ன வேடிக்கை பாத்துகிட்டு இருக்க" என்று அதட்டினார் பாலாவின் அப்பா.. "பாவம்.. புள்ளைய அதட்டாதீங்க...அவன் ஏற்கனவே பயந்து போய் இருக்கான் " என்று பாலாவின் தாய் பாலாவை தன் அருகில் நிற்க வைத்துக்கொண்டாள்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டன ......










"பாலா..... பாசுடு இன் என்ட்ரன்ஸ் எக்ஸாம்".. என்று அந்த அதிகாரின் உதடுகள் உச்சரித்தன ....

என்னங்க, "நம்ம புள்ள பேர சொல்லுராங்க......" என்ன எதுன்னு விசாரிங்க..... என்று ஆர்வத்துடன் தன் கணவரின் தோல்மேல் தட்டினால் அந்த தாய்....

"உங்க பையன் பாஸ் பணிட்டான்... நாளைக்கு உங்க பையன வந்து ஸ்கூல்ல ஒன்னாவது சேத்துருங்க" என்று கூறி விட்டு கிளம்பினார் அந்த அதிகாரி.....

"நல்லவேளைய நம்ம புள்ள பாஸ் பண்ணிட்டான் .... எப்ப பாத்தாலும் விளையாண்டுகிட்டே இருக்கான்.. எங்க இவன் பெயிலா போய்டுவானொன்னு பயந்துட்டேன் புள்ளா".. எனக்கூறிய தன் கணவரிடம் " நம்ம புள்ள மேல எனக்கு நம்பிக்க இருக்குதுங்க அவன் நல்ல வருவானுங்க".. என்று நம்பிக்கை விதையை ஊன்றி.. வைத்தால் அந்த தாய்...

இதற்க்கு நடுவே தான் படிக்க போகும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சீ-சா பலகையில் இரண்டு சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து வியந்து கொண்டிருந்தான் அந்த 5 வயது சிறுவன் பாலா..... "நாளைக்கு நானும் நானும் இங்க வந்து விளையாடுவேன் ஆத்தா, நான் பாஸ் ஆகிட்டேன்".....
என்று மழலை மொழியில் அவன் உதடுகள் உச்சரித்தன......

எழுதியவர் : (31-Jan-15, 9:42 pm)
சேர்த்தது : subashini.mpsi
பார்வை : 175

மேலே