கல்வியின் அவசியம் ___பாடல்

பாப்பா நீயும் பள்ளிக்கு போ...!
படித்தால் உனக்கு நன்மை அம்மா ..!!

எண்ணும் எழுத்தும் கண்களாகும்
நாட்டின் கண்கள் பெண்களாகும்

வீட்டின் அறியாமை இருள் அகல
பாப்பா உனக்கு கல்வி வேண்டும்


அழாமல் நீயும் பள்ளிக்கு போய்
கல்வி அறிவை வளர்த்திடுவாய்


அன்பும் பண்பும் கல்வியோடு
சேர்ந்து இருந்தால் குலம் செழிக்கும்

படிப்பும் வேலையும் நீ பெற்றால்
அனைத்து சவால்களும் எளிதாகும் !!!

எழுதியவர் : வீ.ஆர் .கே. (1-Feb-15, 4:40 pm)
பார்வை : 168

மேலே