மறந்து போன கவிதைகள்

திடீரென
முளைக்கும்
காளான்
கவிதைகள்!

காதிதம் தேடி
பதிக்கும் முன்னவே
தொலைந்து போன
நிச வரிகள்!

இதோ...
நிழல் வரிகள்..
தொடங்கியதொரு தேடல்
எழுதுகோலெங்கே?

எழுதுகோல் சரணடைந்தது!
என் எழுத்துக்களுக்காய்
கண்ணீர் கசிய
வேண்டுமே....!

வேராருமல்ல!
எழுதுகோல்!
மை தேடி
மற்றுமோர் தேடல்!

எழுதுகோல் மை
கையிருப்பு!
எழுத ஆயத்தம்!
எதில் தொடங்க?

எப்பவுமே
கடினம் தான்!
நடுக்கம்...
தயக்கம்...!

முதல் முத்தம்!
எழுதுகோலுக்கும்
காதிதத்திற்கும்...
முத்தச்சுவடென எழுத்துக்கள்!

காட்டுவழி கட்டைவண்டியென
தட்டுத் தடுமாறி
சேராச் சேர்ந்த
எழுத்துக்கள்! வார்த்தைகள்!

இத்தனையும்
இத்தனையனின்
ஓர் மொக்கைக்
கவிக்காக.....

எழுதியவர் : மனோஜ் கியான் (2-Feb-15, 3:38 pm)
பார்வை : 183

மேலே