ஆங்கில மோகம் அ மோகம்

தமிழன்
தன் குழந்தை
அம்மா என்றால்
அலறுகிறான் - அதுவே
மம்மி என்றால்
முகம் மலருகிறான்

அப்பா என்றால்
தப்பு என்கிறான் - அதுவே
டாடி என்றால் முதுகில்
தட்டி கொ(கெ)டுக்கிறான்

தமிழனுக்கு
தமிழேன்றாலே
தீராத கோபம் வருகிறது
பணம் படுத்தும் பாட்டால்
அவனுக்கு
ஆங்கில மோகம் (அ) மோகம் .

*ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (1-Feb-15, 8:55 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 175

மேலே