மஞ்சப் பை
"டேய்... இங்க வா..."
"பத்து நாள் முன்னாடி தாத்தாவுக்கு பிறந்த நாள்னு சீக்கிரமே ஸ்கூல்ல இருந்து போய்ட்ட... ஒரு வாரம் முன்னாடி தாத்தா இறந்துட்டாருன்னு லீவ போட்டுட்ட... இப்போ என்னடான்னா தாத்தா ஆஸ்பத்திரில சீரியஸா இருக்காருன்னு நேத்து லீவ போட்டிருக்க... என்ன தைரியம் இருந்தா எங்கிட்டயே பொய் சொல்லுவ... சொல்லுவியா இனிமே...சொல்லுவியா இனிமே..."
டீச்சர் அடிக்காதிங்க டீச்சர்...நான் சொல்லுறத கேளுங்க டீச்சர்... எங்க தாத்தாவோட பிறந்தவுங்க ஏழு பேரு டீச்சர்... போன வாரம் தவறுனது எங்க மூத்த தாத்தா..இப்போ சீரியஸா இருக்குறது மூணாவது தாத்தா...இன்னும் அஞ்சு தாத்தா இருக்காங்க...அது போக ஏழு பாட்டி இருக்காங்க....எங்க குடும்பம் கூட்டு குடும்பம் டீச்சர்...!