செல்போன்
ரயில் பயணத்தின்போது இருவர் ...
"மச்சி இப்பெல்லாம் வயசான கிழம் கூட காதுல ஹெட்போன் மாட்டிகிட்டு பாட்டு கோட்டுட்டு போறாங்க...காலம் ரொம்ப மாறிடுச்சு"
"மெதுவா பேசுடா..கேக்க போகுது"
"ஹெட்போன் மாட்டினா ஒன்னும் கேக்காதுடா..இப்ப பாரு..
ஏ...டோமர் தலையா!"
அருகில் இருந்த வயாதானவர் கடுப்பாகி
"ஏன்டா நானே காது கேக்கலேன்னு மெசின் மாட்டிருக்கேன்..உங்களுக்கு நக்கலா " என்றார்.
"ஐயையோ இப்பொல்லாம் எவன் ஹெட்போன் மாட்டிருக்கான்...எவன் மெசின் மாட்டிருக்கான்னே தெரியமாட்டேங்குதே" என்று புலம்பினான்.