நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
பசியும்வலியும் அனைவர்க்கும் சமமானபோது..
என்பசி உயர் வென்றும்..
உன்வலி தாழ்வு என்றும்..
சாதிச்சண்டையிடும் உலகைக் கண்டால்..
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
மனிதருள் மனிதராய்ப் பிறக்கும்
மாதவம் பெற்றமனிதா!- உன்னிடம்...
மாற்றுத்திறனாளி பட்டம்பெற்றவர் நாங்கள்
உங்களிடம் இருப்பவையில்...
ஒன்றில்லை எங்களிடம் - என்றாலும்
சிறுபான்மை மதம் என்றோ
பிற்பட்ட சாதியென்றோ சொல்லி
இடஒதுக்கீடு கோரவில்லை - எனும்போது
நம்மில் நம்மை நாமாகப்பிறித்து..
நாம்பறித்த இடத்தை..
இடவோதுக்கீடு வேண்டும் என்று..
நம்மிடமே நம்மவர் போராட..
நாம் செய்தநிலை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
