உன்னைத்தானே

கைக்கு வந்தாய் அழகாக தானே
கணினி பெற்ற பிள்ளை நீயே
பைக்கு வந்தாய் செலவாக தானே
பணியில் மற்ற தொல்லை நீயே
உடந்தை ஆனாய் பழக தானே
உடனடி உற்ற தோழன் நீயே
உடைந்து போனாய் வழுக்கி தானே
உன்னிடம் தோற்ற ஊழியன் நீயே
தொடர்பு வைத்தாய் தொலைவில் தானே
தூரம் முற்ற பழக்கம் நீயே
படைப்பு ஆனாய் சிறப்பாக தானே
படிக்க விற்ற வழக்கம் நீயே