கண்ணீர் கடந்து வந்த பாதை

முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.

அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.

இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.

கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.

கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.

அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.

மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.

உனைக் கண்ட நொடி,
வழியெங்கும் வான வேடிக்கை...
வலிமட்டும் தானே இங்கே வாடிக்கை.

'இறந்திடவே நான் பிறந்தேன்'
அவள் விழிக்குள் வாழ்ந்திடவே,
நான் இறப்பேன்.

எழுதியவர் : இன்பா (3-Feb-15, 2:38 am)
பார்வை : 768

மேலே