ஓவியம் வரையாத ரசிகன்

தொடருந்து
எறிந்த சோவியத் ரஷ்யாவின்
எரிமலையில்
பவ புண்ணியங்களை
கழுவிய போது
உன் காதல் சொற்கள்
என் உள்ளங்கையில்
சிவந்து போனது
கந்தகத்தை
ஆராய்ச்சி செய்யும்
உன் கண்கள்
பாஸ்பரசை
என் கண்ணில்
எரிந்து சென்றதேன்
துயர் இல்லா
கிறுக்கல்கள்
மத்தியில் ஓவியமாக
மாறிய நீ
என்னை ஓவியனாக
மாற்றாமல்
ரசிகனாக நிற்கவைத்து
சென்றாயே .

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Feb-15, 10:54 am)
பார்வை : 264

மேலே