நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
___நம் தேசம் போற்றுவோம்....! வளர்ப்போம்....! - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி___
மூணுகால் முக்கால் நீரும் ஒருகால் நிலமும் கொண்ட பூமியில்,
முப்பக்கம் நீரும் ஒருபக்கம் நிலமும் சூழ்ந்து தீபகற்பமாக,
நம் கண்டத்தின் துணையாக ஜொலிக்கும் தேசம் நம் தேசம்...!
அணு யுரேனியம் முதல் தாதுஉப்பு தனிமம் வரை கொண்ட தேசம்...!
அகழ்வாராய்ச்சி முதல் விண்ணாராய்ச்சி வரை சாதனைகள் கண்ட தேசம்...!
தற்கால தன்னளவைவிட பன்மடங்கு இருந்து, பல மன்னராட்சி அயலானாட்சி
கண்ட தேசம்...!வகைவகையாய் வாசனைபொருள்கள் விளைந்துவழியும் தேசம்...!
எக்காலம் தோன்றியது என திக்குமுக்காட வைக்கும் முத்தமிழ் கொண்ட தேசம்...!
கொடைவள்ளல்கள் குறுநிலமன்னர்கள் ஆட்சிமுதல் மக்களாட்சி வரை கண்ட தேசம்..!
அதிசயங்களில் ஒன்றாம் தாஜ்மகாலை கொண்ட தேசம்...!கேட்டாலே வீரஉணர்வூட்டும்
சத்யமேவ சயதேவும், ஜனகனமன கதியும் , வந்தே மாதரமும் கொண்த தேசம்...!
பற்பல போராளிகள் முதல் கவிபுலவர்கள் வரை கண்ட தேசம்...!
எம்மதமும் சம்மதம், வேற்றுமையில் ஒற்றுமை பின்பற்றும் தேசம்...!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சொன்னவனுக்கேற்ப
எல்லா வளமும் நிறந்த நம் தேசத்தை ஒவ்வொருநாளும் போற்றுவோம்...!
ஜாதி மதம் மொழி வேறுபாட்டை மறந்து , தன்நலம் கருதினும் பிறர்அவர்
நலம் கெடாது வாழ்வோம்...! நம் தேசம் போற்றுவோம் ...!சாதனைகள்
பலபடைத்து அவற்றால் தேசத்தை போர்த்துவோம்...! வளர்ப்போம்...!
--அன்பு.சங்கர்
அரியலூர்.
08089216390

