நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
பக்கத்து வீட்டுக்காரர் அதி
அற்புதமாய் வீடு கட்ட - அவர்
பாராட்டு மழையினில் நனைவது காண
நெஞ்சு பொறுக்குதில்லையே!
தகுதியினால் வியர்வை சிந்தி
தன்னுழைப்பால் உச்சம் தொடும்- நல்ல
தரமுடையோர் உயர்வை நாளும் காண
நெஞ்சு பொறுக்குதில்லையே!
மனைவியின் மேல் அன்புடனே
அக்கறை கொண்ட கணவன்-நல்ல
முன் மாதிரியாய் தெரிவது காண
நெஞ்சு பொறுக்குதில்லையே!
என்றெல்லாம் உள்ளுக்குள் தினம்
எண்ணிக் குமைகின்ற குவலயத்தோர்-அவர்
கொதிக்கும் மனநிலை தனைக் காண
நெஞ்சு பொறுக்குதில்லையே!
--------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407