இருள் சூழ்ந்த உலகில் தனிமையில்

வாழ்க்கையின் வசந்தங்கள்
வரவேற்றதா.. இல்லையோ..
வெறுமையும் இன்னல்களும்
வாட்டி வாட்டி எடுக்கிறது!
இடைவேளை எடுத்துக்கொள்!
இம்சிப்பதை நிறுத்திக்கொள்!
வேதனைகளிலும் நேர்மையாய்,
வாழ்பவர்களை எள்ளி நகையாடிடும்,
வீணர்களின் வாய்க்கெல்லாம்
சற்று கனமான பூட்டு
போட்டுவிடு இறைவா!
தீயவர்களின் நாக்கு
தீப்போல் கக்கும் வார்த்தைகளையும்
தீமைகளைப் புரிந்துவிட்டு
தப்பிக்க பழிபோடும் வம்பர்களுடன்
வாழும்போது உலகம் ஒரு இருட்டறை!
தாயின் கருவறையை விட இருட்டு
கல்லறைக் கூட கோயிலாகும்!
பாசமான மனிதர்கள் பக்கத்தில்
கயவர்கள் வாழுமிடம் கொடும் நரகம்தான்!
வசந்தங்கள் வாழ்க்கையில் வாராதா?
வாழுமிடம் அமைதி ததும்பும் ஆலயமாகாதா?
இறைவா
மாற்றங்களுக்கு கூட வழியில்லையா
இருள் சூழ்ந்த உலகின் தனிமையில்?